Global social harmony
உலகளாவிய சமூக ஒத்திசைவு
‘மனித’ ஒளி என்று நாம் உணர்ந்தவை
உண்மையில் இயற்கை யானவை. இதை அறிவியல் சமீபத்தில் வெளிச் சம் போட்டுக் காட்டியுள்ளது.
மனித உடலின் அனைத்து பாகங்களும் ஒருமின் காந்த புலத்தை வெளியிடுகின்றன. உடலின் அனைத்து முக்கிய பாகங்களுள்ளும் தலைமை யான உறுப்பான
இதயம் மிகப்பெரிய மின்காந்த புலத்தை வெளியிடுகிறது. மேலும் இந்த உண்மையன உயிரியலைப் புரிந்து கொள்ளும்போது, நம்மால் பொதுவாக
ஏற்கனவே அறியப்பட்டதைவிட,உயிரியல் மிகமுக்கியமான பாத்தி ரத்தை வகிக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. மேலும் எல்லா மனித உயிர்களுடனும்
நாம் பகிர்ந்து கொள் ளும் போது அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று தொடர்புடைதா யிருக்கின்றன
என்பதை கண்டுகொள்ள முடிகிறது.
இதயம் மிகப் பெரிய மின்காந்த புலத்தை வெளியிடுகிறது.
இதயம் வெளியிடு கிற இந்த புலங்களும் அவற்றில் குறியி டப்பட்ட தகவல்களும், நாம் எப்படி
உணர்கிறோம்?, என்ன நினைக்கிறோம்? என்பதெல்லாம் நாம் மேற் கொள்ளும்
வெவ்வேறு உணர்ச்சிகளின் அடிப் படையில் மாறலாம்.
குறுகியகால மற்றும் நீண்டகால நினைவாற்றல் கொண்ட நியூரான்களின் அமைப்பு மூலம் இதயம்
மூளைக்குரிய சமிக்ஞைகளை அனுப்புகிறது.,மேலும் இந்த சமிக் ஞைகள்
நமது உணர்ச்சி அனுபவங்களில், ஏற்றபடி குணம் செய் யும். மனிதனுள் இயற்கையாக அமையப்பெற்றுள்ள இந்த இயல் பான ஏற்பாடுதான் “உலகளாவிய
சமூக ஒத்திசைவு” என் கிற "உன்னத நிலை" உருவாக வழிவகுக்கிறது.
இதய ஒத்திசைவு என்பது ஓர் இணக்கமான ஒழுங்கு, மற் றும் கட்டமைப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றது. அதன் உகந்த
செயல் பாடு அதன் செயல்முறைகளில் எளிமை மற்றும் இயல்பான ஓட்டத்துடன் நேரடியாக தொடர்புடை யது. அடிப்படையாகவே அன்பு, அழகிய பண்புகள், இரக் கம், ஈகை, வெட்கவுணர்வு, நன்றி யுணர்வு, நலவுகளைப் பாராட்டுதல், பிறரின் தவறுகளைப் பொறுத் தல், தன்னு டைய தவறுகளின் மீதுவெட்கிடும் உணர்வு, தன்னு டைய நல்ல செயல்களின்மீது மகிழ்தல், தன்னுடைய கெட்ட செயல்களின்மீது
வெருப்படைதல் மற்றும் பிற ‘நேர்மறை’ உணர்வுகள் நம் நரம்பு மண்டலத்தில்
ஒரு தாக்கத்தை ஏற் படுத்துகின்றன. அதோடு அவை நம்மைச் சுற்றியுள்ளவர் கள் மீதும் ஒரு
வித நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின் றன. இது உலகெங்கி லும்
பரவலாகும்போது இதுவே “உல களாவிய சமூக ஒத்திசைவு" என்னும் உயர்பதவியைப்
பெற்றுவிடுகிறது..
ஏனென்றால் உயிர் மற்றும் உடல் ஆகிய இரண்டையும்
ஒன்றி ணைத்து, படைத்தவனால் சிறப்பம்சமாக மானுடப் படைப்பு ஆரம்பிக்கபடுகின்ற
வரையிலுமே, அனைவரின் உயிர்களுமே “ஆலமே அர்வாஹ்” என்கின்ற “உயிர்களை மட்டுமே தனியாகக்
கொண்டிலங்கும் “உயிர்களின் உலகத் தில்” ஒன்றாகத்தானிருந்து வந்திருக்கின்றன. நாம் அனை வருமே ஆரம்ப பெற்றோர் "ஆதம்- ஹவ்வா" அலைஹி முஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றல்கள் தான். நம்மு டைய முன்னோர்கள் எல்லாம் “ஒன்றே குலம்: ஒரு வனே
தேவன்” என்று ஓங்கி முழங்கியவர்கள்தான். வழிப்பயணத் தில் காட்சிகள் மாறிடுவது போல் வாழ்க்கைப்பயணத்தி லும் காட் சிகள் மாறியுள்ளன.
நம் சிந்தைக்குரிய விருந்தும் மருந்தும்:
உதாரணமாக இன்று அமெரிக்கக்கண்டத்தின் ஓர் ஊரி லோ, ஆப் பிரிக்கக்கக்கண்டத்தின்
ஓர் ஊரிலோ அல்லது ஐரோப்பாக்கக் கண்டத்தின் ஓர் ஊரிலோ, நம் இந்தியத் துணைக்
கண்டத்தின் வடகோடியைச் சார்ந்த ஓர் இந்திய ரும், நம் இந்தியத் துணைக் கண்டத்தின் தென்
கோடியைச் சார்ந்த இன்னோர் இந்தியரும் தற் செயலாகச் சந்திக்க நேர்ந்தால் என்ன
நிகழ்கிறது? …
“நீங்கள் இந்தியாவா?ஆம்! நீங்களும் இந்தியாவா ?ஆம்! எந் த மாநிலம்? எந்த மாவட்டம்?
எந்த ஊர்? உங்கவீடு கவர் மென்ட் ஸ்கூல் தெருவில், ஸ்கூலுக்கு எதிர் வரிசையிலா
இருக்கு? எங்க தாய்மாமாவீடு கவர்மென்ட் ஸ்கூல் தெருவி லேயே உள்ள டீச்சர்ஸ்
குவாட்டர்சில் தான் இன்னும் இருக் கிறது. எங்க தாய் மாமா அதே ஸ்கூலில் ஹிந்தி டீச்சராக ஒர்க் பண்ணிக்கொண்டு அதேவீட்டில் தான்
இன்னும் வசித் து வருகிறார். என்னசார் சொல் றீங்க? அந்த ஸ்கூலின் ஹிந்தி டீச்சராக இருப்பவர்தான்
உங்க ளின் தாய்மாமாவா? இரண்டு மாதங்களுக்கு முன்புதான் எங்கள் வீட்டில் நடை பெற்ற என் அண்ணன் மகனுடைய
மேரேஜ் விருந்தில் எங்க ஹிந்தி டீச்சர், அதாவது உங்க தாய்மாமா
கலந்துகொண்டி ருந்த போது நான்தான்சார் அவர் கூட இருந்து அவ ருக்குப் பணிவிடைசெய்து கவனித்துக் கொண்டேன். அப்படீன்னா .. சார், நீங்களும் நானும் ரெம்பாவாய் நெருங்கிட்டோம்
சார். என்ன குறைத்துச் சொல்றீங்க? ரெம்ப ரெம்பாவாய் நெருங் கிட் டோம் என்று
சொல்லுங்க சார்! வருடா வருடம் எங்க
தாய் மாமா வெக்கேஷனில் ராஜஸ்தானுக்கு வருவதுதான் வழக்கம். த்ரீ இயர்ஸுக்கு முன்பு .மாமாவின்
நெருங்கிய ஆசிரிய நண்பருடைய பேமிலியில் ஒரு முக்கிய கல்யாண மாம். அதனால் அந்த
வெக்கேஷனில் எங்க குடும்பத்தை யெல்லாம் எங்க தாய் மாமா உங்க சென்னைக்கு வரவ ழைத்துக்
கொண்டு விட்டாங்க. அப்போ நான் கோர்ஸ் முடித்து ஜாப் செர்ச்சில் இருந்தேன். என்னையும்
கட்டாயப் படுத்திட்டாங்க. அங்க வைத்து செய்த ஆன் லைன் ஜாப் செர்ச்சில் தான் எனக்கு
இந்தஜாப். உங்களுடைய லார்ஜ் மெரீனாவையும் மெட்ராஸ் யுனிவர்சிடியையும் என்னால் மறக்கவே முடியாது சார். நீங்க இந்த
சிட்டிக்கு வந்து மூன்று மாதம்தான் ஆகிறதா?
நான் இந்த சிட்டிக்குவந்து த்ரீ இயர்ஸ். அப்படீன்னா இந்த ஏரியாவின் ஹோட்டல்கள்
முழு தும் உங்க ளுக்குத் தெரிந்திருக்காதே? இப்போ ஒன்னு செய் வோம். இந்த பார்க்
ரோட்டின் லாஸ்டில் உங்க பக்கத்து ஸ்டேட் கேரளா காரரின் சூப்பர் மெஸ் இருக்கிறது.
இப்ப லஞ்ச் டைம் வேற நெருங்கிடிச்சு. டுடே சண்டே. இன்னும் கொஞ்சம் டைம்தள்ளிப் போனால் கூட்டம்தான். இப்ப சவுத் இன்டியா மீல்ஸ்
கிடைக்கும். காலையிலும் மாலையிலும் சவுத்
இன்டியா டிபன் கிடைக்கும். இன்று லஞ்ச்சுக்கு நீங் கள் என்னுடைய கஸ்ட், ஓகே?
சாரி சார். என்னுடைய ரூமில் எனக்காக என் சைனாகார ரூம் மேட்டும் என் மலேஷியாகார
ரூம்மேட்டும் வெயிட் பண்ணிக் கொண்டுள்ளார்கள். நான் இப்ப ஒரு டாக்சியில் அவர்களை
பிக் செய்துகொண்டு அவர்களின் பிளான்படி லஞ்ச்சுக்கு போகணும். சாரி
சார்.இன்னொருநாள் பார்க்க லாம் சார்.
என்னது? கிடைத்த நாளை விட்டுவிட்டு இன்னொரு நாளா? இது நம்ம
நாட்டுப்பழக்கமில்லையே?சரி இப்ப என்ன? டாக்சி வேண் டாம். நான் சிங்கிள்தான்.
அதனால் உங்களு டைய அனுமதி யுடன் இப்ப நாம்
டூ பெர்சன்ஸ் என்காரில் இங்கிருந்து புறப்பட்டு உங்களுடைய ரூம் நண்பர்களையும்
உங்களுடைய ரூமிலேயே பிக் செய்து கொண்டு, நாம் நான் குபேராக ஒன்றாக பிளான் பண்ணி
லஞ்ச் செய்வோம். நம் இந்தியாவுக்குத்தான் வோட் மெஜாரிடியுள்ளது. யு நீட் நாட்
ஒர்ரி.நானும் அப்படியே உங்களு டைய ரூமுக்கும் வந்துபோ ரதுக்கு வழிதிறக்கும். எனக்கு
மேலும் புதிய நண்பர்கள், வாங்க வாங்க,நான்கு பேருமே ஆசியாதான். உங்க பக்கத்து
ரூமில் இருக்கும் ஓர் ஆஸ்திரேலியாகாரரையும் நம்முடன் சேர்த்துகொண்டு ஐந்து பேராக
இன்று லஞ்ச் செய் வோம். இன்று நான்தான் ஹோஸ்ட், வித் யுவர் கைண்ட்
அப்ரூ வல் ...தேங்க்யு சோ மச்! ஐ அம் வெரி ஹேப்பி பிரதர்.
கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் ,நெஞ்சு நிறைந்து விடும்! கண்கள் நனைந்துவிடும்.
விருந்தும் கிடைத்துவிடுகிறது. அதுவேதான் மருந்தும் ஆகிவிடு கிறது.
இதுதான் உலகளாவிய சமூக ஒத்திசைவு!“
“ஆலமே அர்வாஹ்” என்கின்ற “உயிர்களை மட்டுமே தனி யாகக் கொண்டிலங்கும்“உயிர்களுடைய
உலகத்தின்" இயல்பான வெளிப் பாடுகள்தான் இவை!. இயல்பு இயல்பு தான்! இயல்பைவிட்டு மாற்றுவதற்குத்தான்
பல்வேறு செயற்கை அமைப்புகளும்,செயற்கையான ஊடுருவல் களும்! அப்பப்பா!
விருந்தும் மருந்தும் உங்களுக்கு நிரம்பப் பிடித்திருக்கும் தானே?.. பின்னே
என்ன?.. என்ன யோசனை?.. ஏன்தாமதம்? நாமெல்லோருமே ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளலாமே!
“ஆலமே அர்வாஹ்” என்கின்ற “உயிர்களை மட்டுமே தனி யாகக் கொண்டிலங்கும் “உயிர்களுடைய
உலகத்தின் உறுப்பினர்களுக்குள் இத்தகு இணைப்பா? அப்போ ஏன், மிகச் சிறிய உலகமாகிய
ஒரேதாயின் வயிற்றுக்குள்ளே இருந் தவர்களின் வழக்குகள் நீதி மன்றங்களில்
குவிந்துள் ளன?
ஓ அதைச்சொல்ல வருகிறீர்களா?அது உறுதிமிக்க தடிம னான பாறைக்குள்ளே செருகப்பட்ட
பொடீ...வெடித்திரி யாக்கும்:பொன்னாசை,மண்ணாசை,பொருளாசை,பெயராசை,பேராசை போன்ற
பொடிப்பொடி நூல்களெல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டும், ஒன்றுசேர்ந்த அவை ஒன்றை யொன்று
முறுக்கிக்கொண் டும் பொடீ...வெடித்திரியாக
வடிவம் பெற்றுவிட்டது! இப்போதும் ஒன்றுமில்லை. நாமெல் லாம் ஒன்று சேர்ந்து அந்த
பொடீ... வெடித்திரியின் வெளி நுனியில் பற்றவைக்கப்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும்,
நம்முடைய பலமும் சேர்ந்து ஒட்டுமொத் தமாக நம் அனைவரின் பலமும் பெருகிவிடும்!
குறிப்பு:மனிதனிடத்தில், அவனையறியாமலோ அல்லது கெட்டவர் களின் சகவாசத்தாலோ அல்லது மனித சமுதா யத்தின் பகிரங்கமான எதிரிகளாகிய சாத்தான்களின் தீய தூண்டுதலாலோ, ஒரு தவறு ஏற்பட்டுவிட்டால், பிரகாச மாயிருக்கும் அவனுடைய இருதயத்தில் ஒரு கரும் புள்ளி ஏற்பட்டுவிடுகிறது. அவன் அந்த தவறையுணர்ந்து அத்த வற்றுக் குப் பகரமாக ஒரு நன்மையைச் செய்து அத்தவறுக்கான பிராயச்சித்தத் தைத் தேடிக்கொள்ளும்போது அத்தவற் றின் காரணமாக அவனுடைய இருதயத்தில் ஏற் ட்டுவிட்ட அந்த கரும்புள்ளி மறைந்து அவனுடைய இதயம் மீண்டும் பிரகாசமாகிவிடுகிறது. மாறாக அவன் தொடராக எதிர்மறை யாகவே செயல்படத் தலைப்பட்டால் அவனுடைய இருத யத்தில் தொடராக கரும்புள்ளிகள் ஏற்பட்டு அந்த இருதயம் கருமை யடைந்து விடும். அவ்வாறு கருமை யடைந்துவிடு கின்ற இருதயத்தில் நேர்மறையான எண்ணங்கள் உதயமாகாது. நேர்மறையான எண்ணங் கள் உதயமாகாத நிலை ஏற்பட்டுவிட்டால் அவனுடைய அங்க அவய வங்களில் மூலமாக நேர்மறை யான செயல்களும் உருவாகுவதற்கு வாய்ப்பில்லாத நிலை உண்டாகிவிடும். படைத்தவன் அனைவரையும் பாதுகாப்பானாக! ஆமீன்!!