Saturday 5 September 2020

"இடைநம்பிக்கை –Interfaith"எனும் தவறான வார்த்தை ( a wrong terminology)

 

முந்தைய பதிவாக “உலகளாவிய சமூக ஒத்திசைவு” எனும் தலைப்பில் பார்த்தோம். அதில் விவரிக்கப்பட்ட நேர்மறை  யான விபரங்கள், உலகம் உயர்வு பெற்றிடவும் உலகம் உய்வு பெற்றிடவும் உலகம் உள்ளளவும் தேவை.

தற்போதைய பதிவாகிய” இடைநம்பிக்கைInterfaith எனும் தலைப்பில் விவ ரிக்கப்படுகின்ற விபரங்கள் “உலகளாவிய சமூக ஒத்திசைவு”க்கு முற்றிலும் எதிர் மறையானது.மேலும்.மானுட சமுதாயத்தைச் சீர்குலைத்திடக்கூடியது. எனவே  உலகம் உள்ளளவும் தலைஎடுக்கக்கூடாதது.

"இடைநம்பிக்கை –Interfaith" எனும் தவறான வார்த்தை( a wrong terminology) 

இந்த இடத்தில்  மிக முக்கியமான ஒன்றைப்பற்றிக்  குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டியுள்ளது.அது மனித உரிமைபற்றியது ஆகும். மனிதர்கள் அனைவ ரும் சமம். ஒவ்வொருவரும் எவருக்கும் இரண்டாமவராக இல்லை. .”எவ்ரி ஒன் இஸ் செகண்டு[2] டு நன்” என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. அவர வரின் எண்ணங்களும் செயல்களும் உரிய முயற்சிகளும்தான் அவரவரின் மனித தரத்தை நிர்ணயிக்கக் கூடிய பாராமீட்டர் என்கிற அளவுகோல் ஆகும்! மனிதனின் தரத்தை நிர்ணயிக்கக் கூடிய அந்த நுட்பமான அளவு கோல் எந்த மனிதரின் வசமும் பொறுப்பாகக் கொடுக்கப் படவில்லை. மனி தர்களுள், யாரும் “குவாலிட்டி கண்ட்ரோல்” எனும் மனித தரம் நிர்ணயித்தி டும் தகுதி பெற்றவரும் கிடையாது. எனவே எந்த ஒரு மனிதராலும் பிற மனிதரின் தரத்தை நிர்ணயித்துவிட முடியவே முடியாது. மனித தரத்தை நிர்ணயித்திடும் சிறப்புத் தகுதியை விரும்புவோர்  வேண்டுமானால், அதிக பட்சமாக, ஒவ்வொருவரும் தமக்குத்தாமே சுய பரிசோதனை செய்து கொண்டே, அல்லன கழித்திடவும் நல்லன கூட்டிடவும் பாடுபடலாம். இது பெரிதும் வரவேற்கத் தக்கது! உலகின் உயர்வுக்கும் உய்வுக்கும் உரிய வழி களைக் "கடல்மடை"போல் திறந்துவிட்டுவிடும். நலவுகளெல்லாம் நானில மெங்கும் பல்கிப்பெருகி, சுபிட்சம் நானாபக்கமும் சூழ்ந்திடும். பண்புகளும் பஞ்சமே இல்லாமல் பரவிப் போய்விடும்.

நாமெல்லாம் செய்துவரக்கூடிய “குவாலிட்டி கண்ட்ரோல்” எனும் தர நிர்ண யப்பணியானது நம்முடைய உற்பத்திப் பொருள்களுக்கும் உபயோகப் பொருள்களுக்கும் மட்டுமே உரியது ஆகும். மானுடர்கள் இறைவனின் அற் புதமான படைப்பு. எனவே மனிதனின் தர நிர்ணயப்பணியை எப்படி இன் னொரு மனிதனிடம் கொடுப்பான் படைத்தவன்? தன் பிரதிநிதியாகிய மானு டனின் கண்ணியம் வெகுவாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த அதிகாரத்தைத் தன்வசமே வைத்துக்கொண்டுள்ளான் படைத்தவன்.

ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான மனித உரிமைகள் உள்ளன. அத்தகு உரிமைகளுக்குள் வேறுயாரும் தலையிடக்கூடாது. அத்தகு உரிமைகளுக் குள் வேறுயாரும் தலையிடவும் முடியாது. இதையுணர்ந்து ஒவ்வொருவ ரும் இயல்பாக வாழப்பழகிக் கொள்ளவேண்டும். அதற்கான தொடர் முயற்சி மிகவும் இன்றி யமையாதது. அத்தகு பிரத்தியேகமான உரிமைகளுள் மிக்க உணர்வுபூர்வமானதும் முதன்மை யானதும் “இறையியல்” சார்புடையதுதான். இறையியலில், “இறைநம்பிக்கையும்”, “இறை நம்பிக்கையின்மையும்” இரு வெவ்வேறு திசைகளை நோக்கியுள்ளன. ஆனால் ஒன்றாகப் பயணிக்க வேண்டும்.வாழ்க்கைப்பயணம் அப்படிப்பட்டதுதான். இது சாத்தியமா? என் கிற வினாவை எழுப்புகிறவர்களுக் கெல்லாம் ஒரேயொரு பதிலாக, “பகுத் தறிவு” வழங்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டால், அது மிகை யாகாது!

“இறைநம்பிக்கை” என்பது உறுதியான விசுவாசம்  ஆகும். குறிப்பாக தர்க்க ரீதியான ஆதாரம் ஏதுமில்லாமல் நம்பிக் கைகொள்ளும் பண்பே நிலைப்பட வேண்டும்.  இது மன சாட்சி மற்றும் மனித ஆன்மாவுடன் முற்றிலும் தொடர்புடையதாகும். இப்பரந்து விரிந்துள்ள உலகில் பல்வேறு வகையான “இறையியல் கொள்கை” உடையவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது ஒரு யதார்த்தம்தான். ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்துள்ள தனித்தனி “இறையியல் அடிப்படைத் தத்துவங்களை”ப் பின்பற்றும் முழு உரிமையும், பின்பற்றும் பொறுப்பும் உள்ளது. அனைத்து “இறையியல் அடிப்படைக் கொள்கை” களும் முன்னதாகவே நிர்ணயமாக்கப்பட்டவை ஆகும். “இறை யியல் அடிப்படைக் கொள்கைகள்” மாற்றவோ கலப்படம் செய்யவோ முடி யாதவை. அப்படி மாற்றினாலோ கலப்படம் செய்யப்பட்டாலோ அந்த இறை யியலின் தனித்துவம் இல்லாமற் போய்விடும். அவ்வாறு தனித்துவம் இல் லாமற் போய்விடும்போது அது ஒரு தனி இறையியலாக பரிணமிக்க முடி யாது. அத்தகு நிலைகுலைவுக்கு யார் காரணமோ, அவர்கள் மனித உரி மையை நிச்சயமாக மீறுகிறார்கள். மனித உரிமையை மீறுகின்ற இச்செய லை மானுட சமுதாயத்தால் அங்கீகரிக்க முடியாது. 

எந்த இறையியலும் பிற இறையியலுக்கு எதிரானதல்ல."இஸ்லாம்" என்பது படைத்தவனின் விருப்பங்களையும் படைத்தவனின் வார்த்தைகளையும் பொறுத்துள்ள ஒரு விசுவாசமாகும். இதில் மானுடனின் சுயமான விருப் பத்திற்கும் மானுடனின் சுயமான வெறுப்பிற்கும் கிஞ்சிற்றும் இடம் கிடை யாது. இது படைக்கப்பட்ட மனிதர்களுக்கு சுமார் 125000 தீர்க்கதரிசிகள் மூலம் படைத்தவனால் இறக்கிவைக்கப்பட்டது ஆகும். இந்த பூமியில் மனித குலத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையுள்ள  ஓர் உலகளாவிய உண்மை ஆகும்.."இஸ்லாம்" எப்போதும் "மனிதசமூக நல்லிணக்கம்" மற்றும் மற்ற அனைத்து உயிரினங்களுடனுமான "நல்லிணக்கம் harmony" ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இது நன்கு அறியப்பட்ட உண்மை.

ஆனால், அண்மைக்காலமாக  யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள முடியாத குறுகிய உள்ளத்தையுடைய சிலர்  Interfaith-இன்டெர்பெஇத்-இடைநம் பிக்கை என்கிற ஒவ்வாத ஒரு தவறான சொல்லை [terminology] கெட்ட நோக்கத்தோடு புழக்கத்தில் நுழைத்து பல்வேறு மக்களின் இயல்பான  இறையியல் கொள்கையை சீர்குலைத்துக் கொண்டிருக்கிரார்கள்.அவர்கள் புழக்கத்தில் சேர்த்துள்ள “Interfaith-இன்டெர்பெஇத்-இடைநம்பிக்கை என்கிற சொல்லுக்கு "harmony நல்லிணக்கம் " என்கிற இன்னொரு சொல்லுக்குரிய பொருளை தவறாக முன்வைக்கிறார்கள். அது முற்றிலும் பொருந்தாது. ஏனெனில் "harmony நல்லிணக்கம்" என்கிற சொல் "மனிதசமூக நல்லிணக் கத்தை" சுட்டிக்காட்டுவதற்காக தொன்று தொட்டு புழங்கிவரும்  வார்த்தை ஆகும்.

மனித உரிமைகளின்படி, “இடைநம்பிக்கைInterfaith என்பது நல்லிணக்கத் திற்குஎதிரானது. இது மனித உரிமைகளை பாதிக்கிறது.எனவே  இடை நம்பிக்கைInterfaith என்பது மனித உரிமைகளுக்கே எதிரானது ஆகும்..[அல்குர்ஆன்-சூரா 109: 1-6]

இடை நம்பிக்கை Interfaith என்பது  இனிப்பு பூசப்பட்ட விஷம்ஆகும். தற் போது இவ்விஷம் உலகம் முழுவதும் தவறாக பரவுகிறது. மனிதத்தன்மை யிலிருந்து மாறுபடுபவர்களாலும் மனித உரிமையை மீறுகிறவர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது. இச்செயல் மனிதர்களின் அனைத்துவித மான நற்செயல்களையும் அனைத்துவிதமான நலவுகளையும் மாற்றிவிடு வதோடு  மனிதர்களுக்குத் துன்பம்தரும் அனைத்துவிதமான கெடுதல்களை யும் நஷ்டங்களையும் மனிதர்களிடம் கொண்டுவந்து திணித்துவிடும்.

No comments:

Post a Comment