Wednesday, 2 September 2020

தீனுல் இஸ்லாம் இலகுவானது! சொர்க்கம் செல்லஇலகுவான வழி.!!

 

தீனுல் இஸ்லாம் இலகுவானது! சொர்க்கம் செல்லஇலகுவான வழி.!!

இரத்தினக் குவியல்களின் சுருக்கம்:

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி  முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர் களின் மேற்காணும் திருமொழிக்கருத்தை சற்றுற்று நோக்கு வோமாக:

1 அல்லாஹுதஆலா சொல்வது:

ஸூரா 103. ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல் லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

காலத்தின் மீது சத்தியமாக;நிச்சயமாக:மனிதன் நஷ்டத்தில் இருக் கின்றான்;ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலி ஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொ ருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமை யைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

2. அண்ணல் நபி முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல்லல் லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் சொல்வது:

1.“எண்ணங்களைப் பொறுத்தே எல்லா செயல்களும் அமைகின் றன.

2.ஒரு மனிதன் அவசியமற்றதைக் கைவிடுவது இஸ்லாத் தின் அழகிய பண்புகளில் அடங்கும்.

3. தமக்கு விரும்புவதையே தம் சகோதரர்க்கும் விரும்பாத வரை உங்களில் ஒருவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளராய் ஆக மாட்டார்.

4. ஹலாலும் தெளிவானது; ஹராமும் தெளிவானது; இவற்றுக் கிடையில் சில சந்தேகத்திற்குரியவையும் இருக் கின்றன. சந்தே கத்திற்கிடமானவற்றைக் கைவிட்டால் தம் மார்க்கத்தைக் காத் துக்கொண்டார்”.

3. இமாம் அபூ தாவூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மேற்காணும் 4 ஹதீஸ்களைப் பற்றிப் பின் வரும் விஷயத் தைக் குறிப்பிட்டுள்ளார்கள்:

“நான் ஐந்து லட்சம் நபிமொழிகளை எழுதிப் பதிவு செய்துள் ளேன், அவற்றிலிருந்து நான்காயிரத்து ஐந்நூற்று தொண்ணூறு (4590) நபிமொழிகளைத்தேர்வு செய்து ‘சுனன் அபூதாவூத்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளேன். மேற்படி நான்காயிரத்து ஐந்நூற்று தொண்ணூறு (4590) நபிமொழி களிலிருந்து நான்கு நபிமொழிக ளைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நான்கின்படி ஒரு முஸ்லிம் வாழ்ந்தால் இஸ்லாத்தின்படி வாழ்ந்தவராக அவரைக்கருதலாம். சொர்க்கம் செல்ல அந்த நபிமொழிகளே போதுமானவையாகும்.

4 ஹழரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் அத்தெஹ்லவி ரஹ்மத்துல் லாஹி அலைஹி அவர்கள் மேற்காணும் நான்கு நபி மொழி களை இமாம் அபூதாவூத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர் கள் தேர்ந்தெடுத்ததற்கு, பின்வருமாறு விளக்கம் அளித் துள் ளார்கள்:

1. வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவ தற்கு, முதல் நபிமொழி போதுமானது.

2. மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த அருட்கொடையான வாழ்நாளை வீணாக்கிவிடாமல் இருப்பதற்கு, இரண்டாவது நபி மொழி போதுமானது.

3. அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற் று வதற்கு, மூன்றாவது நபிமொழி போதுமானது.

4. ஒரு விஷயம் அனுமத்திக்கப்பட்டதா, அனுமதிக்கப் படாததா என மார்க்கம் சொல்லியிராத நிலையில், இருவித மான கருத்து ஏற்படும்போது ஐயத்திற்கு உரியதிலிருந்து விலகியிருக்க வேண் டும். இதுவே உயர்ந்த முறையாகும். இதைத்தான் நான்காவது நபிமொழி சுட்டுகிறது.

# நாம்,மேற்காணும் இரத்தினக் குவியல்களின் சுருக்கம் தொடர்பாக என்ன முயலவேண்டும்?

முயலும் வெல்லும்!ஆமையும் வெல்லும்!!முயலாமை...?

 

 

No comments:

Post a Comment